டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி + "||" + Madrid Open Tennis At the end of the quarter Naomi Osaka was shocked

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6–3, 2–6, 5–7 என்ற செட் கணக்கில் 18–ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7–5, 7–5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6–1, 7–6 (7–2) என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை ஷார்டியை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் மரின் சிலிச் (குரோஷியா), டோமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தனர். ஸ்பெயினை சேர்ந்த 37 வயதான டேவிட் பெரர் தனது 2–வது சுற்று ஆட்டத்தில் 4–6, 1–6 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோல்வி கண்டார். போட்டிக்கு பிறகு டேவிட் பெரர் அளித்த பேட்டியில் இத்துடன் தனது டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பெர்டென்ஸ் ‘சாம்பியன்’
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
3. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சிமோனா ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
4. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா 3–வது சுற்றுக்கு முன்னேற்றம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.
5. மான்ட்கார்லோ டென்னிஸ்: இத்தாலி வீரர் போக்னினி ‘சாம்பியன்’
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.