டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி + "||" + Madrid Open Tennis Rumble Nadal Qualifying for the semi-final

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால் அரைஇறுதிக்கு தகுதி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதியில் ரபெல் நடால்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்), 7–வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை சந்தித்தார். இதில் 5 முறை சாம்பியனான ரபெல் நடால் 6–1, 6–2 என்ற நேர்செட்டில் வாவ்ரிங்காவை எளிதில் தோற்கடித்து 11–வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9–வது இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7–5, 3–6, 6–2 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், 4–வது இடத்தில் இருப்பவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

பெடரர் அதிர்ச்சி தோல்வி

இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–3, 6–7 (11–13), 4–6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள டோமினிக் திம்மிடம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு களிமண் தரை போட்டிக்கு திரும்பிய பெடரர் ஏமாற்றத்துடன் நடையை கட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) மோதுகிறார்கள்.

பெடரரை வீழ்த்திய பிறகு டோமினிக் திம் அளித்த பேட்டியில், ‘களிமண் தரை போட்டியில் பெடரர் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறப்பு வாய்ந்த வீரர். அவருக்கு எதிராக ஒவ்வொரு புள்ளியை எடுப்பதும் மிகவும் கடினமாகவும், சவாலாகவும் இருந்தது’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ், அரையிறுதிக்கு முன்னேறினார்.
2. ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப்போட்டியில் காயம் காரணமாக செரீனா விலகல்
பெண்கள் ரோஜர்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் அதித முதுகுவலியால் போட்டியின் பாதியில் வெளியேறினார். இதனால், பியன்கா ஆண்ட்ரீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
3. விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் 5 மணி நேரம் போராடி பெடரரை சாய்த்தார்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் ஏறக்குறைய 5 மணி நேரம் போராடி பெடரரை வீழ்த்தி பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார்.
4. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
5. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–ஹாலெப்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் செரீனாவும், ஹாலெப்பும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.