டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி + "||" + Italian Open tennis: Alexander Sherevove lost in the second round

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி
இத்தாலி ஓபன் டென்னிஸின் 2-வது சுற்றில், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ரோம்,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 5-7, 5-7 என்ற நேர்செட்டில் வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற இத்தாலி வீரர் பெர்ட்டினியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் கச்சனோவ் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் மோத இருந்தனர். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் போட்டியில் இருந்து விலகினார். இதனால் வீனஸ் வில்லியம்ஸ் விளையாடமலேயே 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பார்டி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சுலோவாக்கியா வீராங்கனை விக்டோரியா குஸ்மோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், நடால், பிளிஸ்கோவா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
2. இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
3. இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், பெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
4. இத்தாலி ஓபன் டென்னிஸ் ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது.