டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Italian Open tennis: Rafael Nadal and Federer progress to 3rd round

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், பெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ரோம்,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.