டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ரபெல் நடால் வெற்றி + "||" + Rafael Nadal wins French Open first round

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ரபெல் நடால் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ரபெல் நடால் வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் வெற்றி பெற்றார்.
பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.


மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-1, 6-7 (3-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சுலோவாக்கியா வீரர் ஜோஸ் கோவாலிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் செர்பியா வீரர் கெச்மனோவிச் 6-0, 6-7 (7-9), 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை போராடி சாய்த்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடம் நீடித்தது. நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்), போர்னா கோரிச் (குரோஷியா), ஹெர்பெர்ட் (பிரான்ஸ்), ஜில்லெஸ் சிமோன் (பிரான்ஸ்), பிலிப் காஜினோவிச் (செர்பியா), குய்டோ பெல்லா (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் வெரோனிகா குட்மிடோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை பாலினி பார்மென்டிரை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று வீராங்கனையான அன்டோனியா லோட்னெரை (ஜெர்மனி) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் விடாலியா டியாட்சென்கோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் விக்டோரியா குஸ்மோவா (சுலோவாக்கியா), ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா), கயா கனெபி (எஸ்தோனியா), ஜரினா டியாஸ் (கஜகஸ்தான்), ஜெனிபர் பிரடி (அமெரிக்கா), ஹூய் ஜாங் (சீனா), செவஸ்தோவா (லாத்வியா), செல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி
கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.
2. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி - சாய்னா வெளியேற்றம்
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர். சாய்னா நேவால் தோல்வி கண்டு வெளியேறினார்.
3. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றி
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றிபெற்றது.
4. சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
5. கொரிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.