டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மழையால் பாதிப்பு + "||" + French Open Tennis Rain Impact

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மழையால் பாதிப்பு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மழையால் பாதிப்பு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு கால்இறுதி ஆட்டங்களும், ஆண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்(செர்பியா)- அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) இடையிலான கால்இறுதி ஆட்டமும் நடக்க இருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக நேற்று ஒரு ஆட்டத்தை கூட நடத்த முடியவில்லை. இந்த ஆட்டங்கள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்குரிய கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும், இந்த ரசிகர்களுக்கு மைதானத்தின் இருக்கை வசதியை பொறுத்து இன்றைய ஆட்டங்களை பார்க்க இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.