டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி + "||" + Tennis Ranking Achievement: Ashley Barty, who's number one ranked

டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி

டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி
பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது.

பர்மிங்காம்,

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6–3, 7–5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை (ஜெர்மனி) தோற்கடித்து மகுடம் சூடினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக அவர் நம்பர் ஒன் அரியணையில் அமருகிறார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1976–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இவோன் கூலாகோங் முதலிடத்தில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிக்கும் 27–வது வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆவார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் சாதனை
உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார்.
2. விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக வென்று ஹாலெப் சாதனை செரீனாவை வீழ்த்தி அசத்தல்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் நேர் செட்டில் செரீனா வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார்.
3. விம்பிள்டன் டென்னிசில் 100–வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.
4. டோனியின் யோசனையால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தேன்–‌ஷமி
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் சவுதம்டனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.
5. 17 சிக்சர் அடித்து உலக சாதனை: இதுபோன்று அதிரடியாக ஆடுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை இயான் மோர்கன் சொல்கிறார்
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து 4–வது வெற்றியை ருசித்தது.