டென்னிஸ்

விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம் + "||" + Federer is ranked No. 2 in the Wimbledon Tournament

விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம்

விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம்
விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 1-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தாலும் ‘புல்தரை’ போட்டிகளில் சிறப்பாக ஆடியிருப்பதால் அதன் அடிப்படையில் விம்பிள்டன் போட்டிக்கான தரநிலையில் 2-வது இடத்தை பெற்றுள்ளார். ரபெல் நடாலுக்கு (ஸ்பெயின்) 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.


பெண்கள் பிரிவில் முதல் இரு இடங்களில் முறையே ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) இருக்கிறார்கள். அமெரிக்க சாதனை மங்கை செரீனா வில்லியம்சுக்கு 11-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.