டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர் வெற்றி - முகுருஜா, டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி + "||" + Wimbledon Tennis: Federer wins in the first round - Muguruza, Dominic Thim shock failure

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர் வெற்றி - முகுருஜா, டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர் வெற்றி - முகுருஜா, டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். முகுருஜா, டொமினிக் திம் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் லாயிட் ஹாரிசை (தென்ஆப்பிரிக்கா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான 4-ம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் திம் 7-6 (7-4), 6-7 (1-7), 3-6, 0-6 என்ற செட் கணக்கில் 65-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம்குயரியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். இதே போல் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-7, 4-6, 2-6 என்ற நேர் செட்டில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கிடம் தோற்று வெளியேறினார். அதே சமயம் நிஷிகோரி (ஜப்பான்), சோங்கா (பிரான்ஸ்), கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தன்னை எதிர்த்த சக நாட்டவரான தாட்ஜனா மரியாவை 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் சாய்சாய் ஜெங்கை (சீனா) வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

2017-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 121-வது இடம் வகிக்கும் தகுதி நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மையா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), சுவாரஸ் நவரோ(ஸ்பெயின்) உள்ளிட்டோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான 39 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் 15 வயதான அமெரிக்காவின் கோரி காப்பிடம் வீழ்ந்தார். விம்பிள்டனுக்கு தகுதி பெற்ற இளம் மங்கையான கோரி காப் பள்ளி மாணவி ஆவார். 2000-ம் ஆண்டு வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டனை உச்சிமுகர்ந்த போது, கோரி காப் பிறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வீனஸ் தான் தனது முன்மாதிரி என்று சொல்லிக்கொள்ளும் கோரி காப் உலக தரவரிசையில் 313-வது இடம் வகிக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி
தாய்லாந்து பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சாய்னா தோல்வியடைந்தார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். முன்னாள் சாம்பியன் ஷரபோவா, தமிழக வீரர் குணேஸ்வரன் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
3. கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி
கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.
4. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி - சாய்னா வெளியேற்றம்
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர். சாய்னா நேவால் தோல்வி கண்டு வெளியேறினார்.
5. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றி
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சாத்விக்-அஸ்வினி ஜோடி வெற்றிபெற்றது.