டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா + "||" + Wimbledon Tennis In the 3rd round Federer, Serena

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் ஜாய் கிளார்க்கை (இங்கிலாந்து) வீழ்த்தி 17-வது முறையாக 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். முன்னணி வீரர் மரின் சிலிச் (குரோஷியா) 4-6, 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் போர்ச்சுகலின் ஜோவ் சோசாவிடம் பணிந்தார். அதே சமயம் சாம் குயரி(அமெரிக்கா), சோங்கா (பிரான்ஸ்), நிஷிகோரி (ஜப்பான்) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போராடி கஜா ஜூவானை (சுலோவெனியா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.

மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லாரென் டாவிசிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார்.

நம்பர் ஒன் மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, முன்னாள் சாம்பியன் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் ஆகியோரும் 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.