டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதிஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி + "||" + Wimbledon Tennis Rafael Nadal, Serena Williams Eligibility Ashleigh Parti shock failure

விம்பிள்டன் டென்னிஸ்ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதிஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதிஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லிக் பார்டி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
லண்டன், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் 69-ம் நிலை வீரரான ஜாவ் ஜோய்சாவை (போர்ச்சுகல்) எளிதில் தோற்கடித்து 7-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஹூம்பெர்டை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின், அமெரிக்க வீரர் சாம் குயர்ரி, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட் ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவரோவாவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 15 வயது அமெரிக்க பள்ளி மாணவியான கோரி காப்பை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் 55-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-4, 5-7, 11-13 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை கரோலினா முசோவாவிடம் வீழ்ந்தார். மற்ற ஆட்டங்களில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), பார்பரா ஸ்டிரிகோவா (செக் குடியரசு), ஷாய் சாங் (சீனா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.