டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Wimbledon Tennis: Serena, Halep advance to the semi-finals

விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

லண்டன், 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஹாலெப் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

செரீனா போராட்டம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் அலிசன் ரிஸ்க்கை சந்தித்தார். 2 மணி 1 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் செரீனா 6–4, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் அலிசனை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். 19 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது செரீனாவின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. 37 வயதான செரீனா, விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 12–வது முறையாகும்.

இதற்கிடையே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆடுகளத்தை பேட்டால் சேதப்படுத்தியதாக செரீனாவுக்கு ரூ.6¾ லட்சத்தை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அபராதமாக விதித்துள்ளனர்.

ஹாலெப் வெற்றி

மற்றொரு கால்இறுதியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் சிமோனா ஹாலெப் (ருமேனியா), சீனாவின் ஜாங் சூவாயுடன மோதினார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய ஹாலெப் ஒரு கட்டத்தில் 1–4 என்ற செட் கணக்கில் பின்தங்கினார். அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்த ஹாலெப் டைபிரேக்கர் வரை போராடி முதல் செட்டை வசப்படுத்தினார். 2–வது செட்டில் ஜாங்கை நிமிர விடாமல் அடக்கினார்.

முடிவில் ஹாலெப் 7–6 (7–4), 6–1 என்ற நேர் செட் கணக்கில் வாகை சூடி 5 ஆண்டுக்கு பிறகு விம்பிள்டனில் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் உக்ரைன் மங்கை எலினா ஸ்விடோலினா 7–5, 6–4 என்ற நேர் செட்டில் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) விரட்டினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் கால்பதித்துள்ள ஸ்விடோலினா அடுத்து ஹாலெப்புடன் மல்லுகட்டுகிறார்.