டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் + "||" + Wimbledon Tennis: Djokovic in the finale

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 22–ம் நிலை வீரர் பாவ்டிஸ்டா அகுத்தை (ஸ்பெயின்) சந்தித்தார். 2 மணி 49 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6–2, 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி முன்னேறினார்.

4 முறை சாம்பியனான ஜோகோவிச் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) அல்லது ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா), சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் செரீனா வெற்றி பெற்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.