டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி “சிமோனா ஹாலெப் சாம்பியன்” + "||" + Simona Halep beats Serena Williams to win maiden Wimbledon title

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி “சிமோனா ஹாலெப் சாம்பியன்”

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி “சிமோனா ஹாலெப் சாம்பியன்”
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன.

ஒரு ஆட்டத்தில் 7–ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–1, 6–3 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஹாலெப் விம்பிள்டனில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 7 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–2 என்ற நேர் செட்டில் பார்போரா ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. செரீனாவின் தற்போதைய வயது 37 ஆண்டு 291 நாட்கள். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968–ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் இறுதிசுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சிறப்பை செரீனா பெற்றார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 7 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா  வில்லியம்ஸை வீழ்த்தி  ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார். 

வீராங்கனை செரீனா வில்லியம்ஸை 6-2, 6-2 நேர் செட்களில் சிமோனா ஹாலெப் தோற்கடித்தார். ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.