டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம் + "||" + Halep is the Romania hero who graduated from Wimbledon Tennis

விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம்

விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம்
விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்ற ருமேனியா வீராங்கனை ஹாலெப்புக்கு கவுரவம் வழங்கப்பட உள்ளது.
புச்சாரெஸ்ட்,

சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் நேர் செட்டில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் மகுடத்தை சூடிய முதல் ருமேனியா நாட்டவர் என்ற சிறப்புக்குரிய அவருக்கு சொந்த நாட்டில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஹாலெப்பின் சாதனையை வெகுவாக புகழ்ந்துள்ள ருமேனியா அதிபர் கிளாஸ் லோஹானிஸ் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ருமேனியா ஸ்டார்’ வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ருமேனியா அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவமும் அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.