ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப்போட்டியில் காயம் காரணமாக செரீனா விலகல்


ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப்போட்டியில் காயம் காரணமாக செரீனா விலகல்
x
தினத்தந்தி 12 Aug 2019 4:06 AM GMT (Updated: 12 Aug 2019 4:06 AM GMT)

பெண்கள் ரோஜர்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் அதித முதுகுவலியால் போட்டியின் பாதியில் வெளியேறினார். இதனால், பியன்கா ஆண்ட்ரீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

டொரொன்டோ,

 கனடாவின் டொரண்டோ நகரில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சும்   கனடாவின் பியான்கா ஆண்ட்ரீசும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் 3-1 என்ற கணக்கில் செரீனா வில்லியம்ஸ் பின்னிலை பெற்று இருந்தாலும், ஆக்ரோஷமாக விளையாடி வந்தார். ஆனால்,  திடீரென கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. வலியால் கடும் அவதிப்பட்ட செரினா வில்லியம்ஸ் போட்டியில் இருந்து விலகினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாதனை படைத்து 24-வது ”கிராண்ட்ஸ்லாம்” பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் வெல்வார்  என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் காயத்தால் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

செரீனா வில்லியம்ஸ் காயத்தால் வெளியேறியது பற்றி கூறும் போது, “மன்னிக்கவும், இன்று என்னால் வெற்றி பெற முடியவில்லை. நான் முயற்சித்தேன், ஆனால் என்னால் முடியவில்லை, இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால் நாங்கள் தொடர்ந்து செல்வோம்."என்று கண்ணீருடன் சிரமப்பட்டு கூறினார் வில்லியம்ஸ்.

Next Story