டென்னிஸ்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் ‘சாம்பியன்’ + "||" + Cincinnati Masters Tennis: American player Madison Keys 'champion'

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் ‘சாம்பியன்’

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் ‘சாம்பியன்’
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மாசன்,

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் மெட்விதேவ், டேவிட் கோபினை (பெல்ஜியம்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விதேவ் 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் டேவிட் கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை மெட்விதேவ் வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் மெட்விதேவ் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். 2010-ம் ஆண்டுக்கு பிறகு ‘டாப்-5’ தரவரிசையில் இடம் பிடித்த முதல் ரஷிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட டேவிட் கோபின் 4 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 15-வது இடத்தை பிடித்துள்ளார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், 34 வயதான ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை (ரஷியா) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 7-5, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் குஸ்னெட்சோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் மேடிசன் கீஸ் தரவரிசையில் 8 இடங்கள் ஏற்றம் கண்டு மீண்டும் டாப்-10 வரிசைக்குள் இடம் பிடித்தார். தோல்வி அடைந்த குஸ்னெட்சோவா 153-வது இடத்தில் இருந்து 62-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...