இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்பு


இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 10:30 PM GMT (Updated: 22 Aug 2019 10:28 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அடுத்த மாதம் 14 மற்றும் 15-ந்தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்தது.

புதுடெல்லி, 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அடுத்த மாதம் 14 மற்றும் 15-ந்தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் இரு நாட்டு உறவில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு கருதி இந்த போட்டியை பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய டென்னிஸ் சம்மேளனம் கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் இந்த போட்டியை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்பதாக நேற்று அறிவித்தது. ஆனாலும் இப்போதைக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து போட்டியை மாற்றும் எண்ணம் இல்லை என்பதையும் டென்னிஸ் சம்மேளனம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Next Story