டென்னிஸ்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார் பி.வி.சிந்து + "||" + PV Sindhu beats Japan's Nozomi Okuhara 21-7, 21-7; becomes 1st Indian to win BWF World Championships gold medal

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார் பி.வி.சிந்து
உலக சாம்பியன் ஷிப் பேட்மிண்டன் இறுதிபோட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
பாசெல், 

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. ஆல்இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் சென் யூ பேவுடன் மோதினார். 

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட்டில் சென் யூ பேவை துவம்சம் செய்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 

இந்நிலையில், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் 24 வயதான சிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி சுற்றில்  முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை சந்தித்தார். 

மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். மேலும் உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக மகளிர் இறுதிப்போட்டியின் வெற்றியை தனது தாயின் பிறந்தநாளுக்கு அர்ப்பணிப்பதாக பி.வி. சிந்து பெருமிதத்துடன் கூறினார்.