டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி + "||" + US Open Tennis: Japanese player Nishikori wins first round match

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றிபெற்றார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி, 205-ம் நிலை வீரர் மார்கோவை (அர்ஜென்டினா) சந்தித்தார். இதில் நிஷிகோரி 6-1, 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மார்கோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிஷிகோரி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சர்ட்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா பிய்க் (பியூர்டோ ரிகோ) 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ரெபேக்கா பீட்டர்சனிடம் (சுவீடன்) தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 6-7 (8-10), 2-6 என்ற நேர்செட்டில் துனிசியா வீராங்கனை ஜாபிரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.