டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹாலெப், கிவிடோவா தோல்வி + "||" + US Open Tennis: Halep, Kiwitova lost in the 2nd round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹாலெப், கிவிடோவா தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹாலெப், கிவிடோவா தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான சிமோனா ஹாலெப், கிவிடோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் ஒரு ஆட்டத்தில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸ்சை சந்திக்க இருந்தார். வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோக்கினாகிஸ் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ரபெல் நடால் 2-வது சுற்றில் விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 3-6, 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தினார்.

இதே போல் மரின் சிலிச் (குரோஷியா), மெட்விடேவ் (ரஷியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), மான்பில்ஸ் (பிரான்ஸ்), நிகோலஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) டேனியல் இவான்ஸ் (இங்கிலாந்து) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 3-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான டெய்லர் டவுன்சென்டிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். பந்தை ‘செர்வ்’ செய்து விட்டு உடனடியாக வலைக்கு அருகில் ஓடி வந்து சாதுர்யமாக விளையாடும் டவுன்சென்டின் யுக்தியை சமாளிக்க முடியாமல் ஹாலெப் தடுமாறிப்போனார். இவ்வாறு 106 முறை வலை அருகில் வந்து ஆடிய டெய்லர் டவுன்சென்ட் பெரும்பாலும் அவற்றை புள்ளிகளாக மாற்றினார். டாப் 10-க்குள் உள்ள வீராங்கனையை டவுன்சென்ட் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இதேபோல் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் ஆந்த்ரே பெட்கோவிச்சிடம் வீழ்ந்தார்.

நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் போலந்து வீராங்கனை மக்டா லினெட்டை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

வோஸ்னியாக்கி (டென்மார்க்) சோபியா கெனின் (அமெரிக்கா), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), கியாங் வாங் (சீனா), பெலின் டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), பியான்கா ஆன்ட்ரிஸ்கு (கனடா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), மரியா சக்காரி (கிரீஸ்), ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி) ஆகியோரும் 2-வது தடையை தாண்டினர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் திவிஜ் சரண் (இந்தியா)-ஹூகோ நைஸ் (மொனாக்கோ) ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ராபர்டோ கார்பலெஸ் (ஸ்பெயின்)-பெட்ரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா) இணையிடம் தோற்று நடையை கட்டியது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா பட்டம் வென்றார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால்
அமெரிக்க ஓபன் டென்னிசில் ரபேல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.