டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ் + "||" + Serena just won her 100th match at the USOpen

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ், அரையிறுதிக்கு முன்னேறினார்.
நியூயார்க்,

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் சீனாவின் குவாங் வாங் ஆகியோர் மோதினர்.

44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் குவாங் வாங்-கை வீழ்த்தினார்.

இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்திருக்கும் செரீனா, நடப்பு தொடரில் அரையிறுதிக்கும் முன்னேறினார். இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான கிரிஸ் எவெர்ட் மட்டுமே இந்த சாதனை படைத்திருந்தார்.

இதுகுறித்து பேசிய செரினா, இந்த சாதனையை படைப்பேன் என்று எப்போதும் நினைத்ததில்லை எனவும், இது சிறப்பான ஒன்று என்றும் கூறினார். அரையிறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலீனா விடோலினாவை 8-வது இடத்தில் உள்ள செரினா எதிர்கொள்ள உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய பெடரரின் யோசனைக்கு முன்னணி வீராங்கனை ஆதரவு
ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய இது சரியான நேரம் என பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் கருத்துக்கு முன்னணி வீராங்கனை ஆதரவு தெரிவித்து உள்ளார்.