டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா + "||" + Serena Williams defeated by Bianca Andreescu in gripping US Open 2019 final

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா பட்டம் வென்றார்.
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.  நேற்று இரவு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடா நாட்டை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு விளையாடினர்.

இந்த போட்டியில் பியாங்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கனடா நாட்டின் முதல் வீராங்கனை என்ற பெருமையை, பியான்கா பெற்றுள்ளார்.

இதுபற்றி பியான்கா கூறும்பொழுது, இதனை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.  ஆனால், உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.  இதற்காக மிக கடுமையாக உழைத்தேன் என்று கூறினார்.

இந்த வருடம் எனது கனவு மெய்யாகி உள்ளது.  டென்னிஸ் விளையாட்டில் ஓர் உண்மையான சாதனையாளருக்கு எதிராக விளையாடியது ஆச்சரியம் அளிக்கிறது.  இது ஒன்றும் எளிய விசயம் இல்லை.  ஒவ்வொரு போட்டியை  போன்றும் இதிலும் சிறந்த முறையில் விளையாட தயார் செய்து கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக பேட்மிண்டனில் பட்டம் வென்று ஜப்பான் வீரர் மோமோட்டா சாதனை
உலக பேட்மிண்டனில் பட்டம் வென்று ஜப்பான் வீரர் மோமோட்டா சாதனை படைத்தார்.
2. கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : கொருக்குபேட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது
சென்னையில் பட்டம்விட்ட நூல் கழுத்தை அறுத்து, 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
3. புரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ - டெல்லியை வீழ்த்தியது
புரோ கபடி இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.