பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா


பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா
x
தினத்தந்தி 21 Sep 2019 11:25 PM GMT (Updated: 21 Sep 2019 11:25 PM GMT)

பான்பசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டிக்குள் நவோமி ஒசாகா நுழைந்தார்.

ஒசாகா,

பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா இரட்டை வெற்றி பெற்றார். அவர் கால்இறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் யுலியா புதின்ட்செவாவையும் (கஜகஸ்தான்), அரைஇறுதியில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கிலும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரைஇறுதியில் ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா-பாவ்லிசென்கோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையுடன் 470 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும்.

Next Story