டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Chinese Open Tennis Naomi Osaka qualifies for the final

சீன ஓபன் டென்னிஸ்நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு தகுதி

சீன ஓபன் டென்னிஸ்நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு தகுதி
சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது.
பீஜிங், 

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கியை (டென்மார்க்) சந்தித்தார். இதில் நவோமி ஒசாகா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் வோஸ்னியாக்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 3-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.