டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி + "||" + Shanghai Masters Tennis: Djokovic, Federer's shock defeat

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்சை (கிரீஸ்) எதிர்கொண்டார். 2 மணி 3 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச்சை முதல் முறையாக சாய்த்த சிட்சிபாஸ் லண்டனில் அடுத்த மாதம் நடைபெறும் ‘டாப்-8’ வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றார்.


மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-7 (7-9), 6-3 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘பெடரரை மிஞ்சுவேன்’ - ஜோகோவிச் நம்பிக்கை
டென்னிஸ் போட்டிகளில் பெடரரை மிஞ்சுவேன் என்று ஜோகோவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரில் சிறந்த வீரர் யார்? - இவான் லென்டில் பேட்டி
பெடரர், கோகோவிச், நடால் ஆகியோரில் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு இவான் லென்டில் பதில் அளித்துள்ளார்.
3. துபாய் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
துபாய் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.