டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கோப்பையை வென்றார், மெட்விடேவ் + "||" + Shanghai Masters Tennis: Winning Cup, Medvedev

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கோப்பையை வென்றார், மெட்விடேவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கோப்பையை வென்றார், மெட்விடேவ்
சீனாவில் நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மெட்விடேவ் கோப்பையை வென்றார்.
ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது. ஜாம்பவான்கள் ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் கால்இறுதியுடன் வெளியேற்றப்பட்ட நிலையில் இறுதி ஆட்டத்தில் டேனில் மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) நேற்று மோதினர். விறுவிறுப்பான இந்த மோதலில் மெட்விடேவ் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினார். உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் 23 வயதான மெட்விடேவுக்கு இந்த வெற்றியின் மூலம் ரூ.9¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. இந்த ஆண்டில் அவர் வென்ற 4-வது பட்டம் இதுவாகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...