பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டி; போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி


பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டி; போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி
x
தினத்தந்தி 31 Oct 2019 12:52 PM GMT (Updated: 31 Oct 2019 12:52 PM GMT)

இந்தியாவில் நடந்த பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் போபண்ணா மற்றும் டெனிஸ் இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

சண்டிகர்,

இந்தியாவில் ஏ.டி.பி. 1000 ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா மற்றும் கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷாபோவால்வ் இணை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பென்வாயிட் பேர் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டாஸ்கோ இணையை எதிர்த்து விளையாடியது.

63 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா இணை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எதிர் இணையை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.  

இதனை அடுத்து நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவின் மேக்சிமோ கொன்சாலஸ் மற்றும் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையை எதிர்த்து போபண்ணா இணை விளையாடும்.

Next Story