டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஆஷ்லி, பென்சிச் + "||" + Womens tennis championship In the semi-final

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஆஷ்லி, பென்சிச்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஆஷ்லி, பென்சிச்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
ஷென்ஜென்,

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிவிடோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 2-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து)- கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) மல்லுகட்டினர். இதில் பென்சிச் முதல் செட்டை (7-5) கைப்பற்றி அடுத்த செட்டில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது, பெர்டென்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக விலகினார். 2-வது வெற்றியை ருசித்த பென்சிச் அரைஇறுதியை உறுதி செய்தார்.


இதற்கிடையே ஊதா நிற பிரிவில் இடம் பிடித்திருந்த கனடாவின் பியான்கா இடது கால் முட்டி காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார். பியான்காவுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக அமெரிக்காவின் சோபியா கெனின் சேர்க்கப்பட்டுள்ளார்.