டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி-ஸ்விடோலினா + "||" + Women's tennis championship: Ashley-Svitolina in the final

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி-ஸ்விடோலினா

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி-ஸ்விடோலினா
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின், இறுதிப்போட்டியில் ஆஷ்லி-ஸ்விடோலினா ஆகியோர் மோத உள்ளனர்.
ஷென்ஜென்,

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 11 ஏஸ் சர்வீஸ்கள் வீசி மிரட்டிய ஆஷ்லி பார்டிக்கு இந்த வெற்றியை ருசிக்க 1 மணி 53 நிமிடங்கள் தேவைப்பட்டது.


மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்த ஸ்விடோலினா அதன் பிறகு 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கடைசி செட்டில் 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது, தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட பென்சிச் பாதியிலேயே விலகினார். இதையடுத்து ஸ்விடோலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்று நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி-ஸ்விடோலினா மல்லுகட்ட உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேறினார்.
2. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஆஷ்லி, பென்சிச்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.