டென்னிஸ்

இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல் + "||" + Pakistan Appeal Against Transfer Of Davis Cup Tennis Tournament Against India

இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல்

இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல்
இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல் செய்துள்ளது.
கராச்சி,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 29, 30-ந் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் வற்புறுத்தியது. இதனை ஏற்று இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் போட்டி நடைபெறும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம், இந்த முடிவை கைவிடும்படி சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு முறைப்படி அப்பீல் செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலீம் சைபுல்லா அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்த முழு தயாருடன் நாங்கள் இருக்கிறோம். பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை. போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எனவே போட்டியை இஸ்லாமாபத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். எங்கள் வேண்டுகோள் ஏற்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் அப்பீலுக்கு தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கும்படி அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தீர்ப்பாயம் வருகிற 18-ந் தேதி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் - சௌமியா சுவாமிநாதன்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
2. இந்தியா, அமைதியை விரும்பும் நாடு: ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரை
இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறினார்.
3. இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை - மீட்பு விகிதமும் உயர்வு
இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் மீட்பு விகிதமும் உயர்ந்துள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.
5. இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்ந்தது
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.