டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார் + "||" + Tennis Championship: Semi-Final Federer - Djokovic kicked out

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதிக்கு பெடரர் தகுதிபெற்றார்.
லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘போர்க்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார். 2-வது வெற்றியை ருசித்த பெடரர் 16-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் ஜோகோவிச் வெளியேறினார்.


‘அகாசி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-7 (4-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தினார். அத்துடன் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் நடால் தக்க வைத்துக்கொண்டார். புதிய சீசன் தொடங்கும் வரை அவர் தான் நம்பர் ஒன் ஆவார். 2-வது வெற்றி பெற்ற நடாலுக்கு இந்த பிரிவில் கடைசி லீக்கின் முடிவை பொறுத்து அரைஇறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ‘சாம்பியன்’ - டொமினிக் திம்மை வீழ்த்தினார்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், டொமினிக் திம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு டொமினிக் திம் தகுதிபெற்றார்.
3. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியுடன் பெடரர் வெளியேற்றம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார்.
4. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பெடரர் வெற்றி; நடால் தோல்வி
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பெடரர் வெற்றிபெற்றார்.
5. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் எளிதில் வெற்றி
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜோகோவிச் எளிதில் வெற்றிபெற்றார்.