டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்


டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
x
தினத்தந்தி 17 Nov 2019 11:44 PM GMT (Updated: 17 Nov 2019 11:44 PM GMT)

டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு டொமினிக் திம் தகுதிபெற்றார்.

லண்டன்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் டொமினிக் திம், ஸ்டெபனாஸ் சிட்சிபாசுடன் (கிரீஸ்) மோதுகிறார்.


Next Story