டென்னிஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி + "||" + Davis Cup tennis against Pakistan - Indian players Ramkumar and Nagel win

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நூர் சுல்தான்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று தொடங்கியது.

இதில் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், அனுபவம் இல்லாத 17 வயதான பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை சந்தித்தார். 42 நிமிடம் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் ராம்குமார் எதிராளிக்கு ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை பந்தாடினார்.


மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் (இந்தியா), பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். 64 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். டேவிஸ் கோப்பை போட்டியில் சுமித் நாகல் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

வெற்றிக்கு பிறகு சென்னையைச் சேர்ந்த ராம்குமார் அளித்த பேட்டியில், ‘எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். முதல் நாளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை (இன்று) நடைபெறும் ஆட்டத்தில் ஜீவன்-லியாண்டர் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் எங்கள் பணி முடிவுக்கு வரும். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறினார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்-முகமது சோகைப், ராம்குமார்- ஹூஜைய்பா அப்துல் ரகுமான் ஆகியோர் மோதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான, ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
2. மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு
மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை குறித்து பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது
நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு அவசர கடன் உதவியாக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.9,360 கோடி வழங்குகிறது.
4. பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம் பெண்கள் சீனாவிற்கு கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்பனை
பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம் பெண்கள் சீனாவில் உள்ள ஆண்களை மணப்பதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
5. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் - போட்டி ‘டிரா’ ஆனது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த போட்டி டிராவில் முடிந்தது.