டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Davis Cup tennis: India beat Pakistan to advance to next round

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நூர் சுல்தான், 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடந்தது. பாகிஸ்தான் இளம் வீரர்களை களம் இறக்கியதால் இந்திய அணி எதிர்பார்த்தது போலவே ஆதிக்கம் செலுத்தியது.

இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் சுலபமாக வெற்றி பெற்றனர். இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் முகமது சோகைப்-ஹூஜைய்பா அப்துல் ரகுமான் இணையை சந்தித்தது. 53 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெயஸ்- ஜீவன் நெடுஞ்செழியன் இணை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வெற்றி கண்டது.

46 வயதான லியாண்டர் பெயஸ் டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் பெற்ற 44-வது வெற்றி இதுவாகும். கடந்த ஆண்டு சீனாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை ஆட்டத்தில் வென்றதன் மூலம் லியாண்டர் பெயஸ் (56 ஆட்டத்தில் 43 வெற்றி), அதிக இரட்டையர் ஆட்டத்தில் வென்று இருந்த இத்தாலி வீரர் நிகோலா பியட்ரான்ஜெலியின் சாதனையை (66 ஆட்டத்தில் 42 வெற்றி) முறியடித்து இருந்தார். தற்போது அந்த சாதனையில் லியாண்டர் பெயஸ் முன்னேற்றம் கண்டுள்ளார்.டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயசின் சாதனையை மற்ற வீரர்கள் எட்டுவது என்பது கடினம் தான். அறிமுக போட்டியில் அடியெடுத்து வைத்த சென்னையை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன் முதல் வெற்றியை ருசித்துள்ளார்.

அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் யூசப் கலிலை (பாகிஸ்தான்) ஊதித்தள்ளி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தார். எஞ்சிய ஒரு (கடைசி) ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 6 மற்றும் 7-ந் தேதி நடைபெறும் உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது. உலக குரூப் சுற்றில் இந்திய அணி குரோஷியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி டேவிஸ் கோப்பை பிரதான சுற்றுக்குள் நுழையும்.

வெற்றிக்கு பிறகு லியாண்டர் பெயஸ் கூறுகையில் ‘முதல்முறையாக டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடும் ஜீவனுடன் இணைந்து ஆடியது அருமையானதாகும். தொடக்கம் முதலே ஜீவன் சரியாக செயல்பட்டார். பரந்த மனப்பான்மை கொண்ட ஜீவன் நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அவருடன் களத்தை பகிர்ந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். இதுபோன்ற வீரர்கள் நான் இளமையுடனும், துடிப்புடனும், புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து விளையாட வழிவகுக்கிறார்கள். அவர்கள் எனது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணருகிறார்கள். வெவ்வேறு தலைமுறை மற்றும் பல்வேறு வயது பிரிவினருடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாகும். இந்திய அணிக்காக மீண்டும் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
2. இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் இராணுவத்தில் புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
3. கராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என இந்திய தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
4. ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ;வலுக்கும் எதிர்ப்பு
பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5. விசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சினை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.