டென்னிஸ்

டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவிப்பு + "||" + Wozniacki announces retirement from tennis

டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவிப்பு

டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவிப்பு
டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார்.
ஒடேன்சி,

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான டெமார்ன்கின் கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த மாதம் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். 29 வயதான வோஸ்னியாக்கி இதுவரை 30 பட்டங்கள் கைப்பற்றியுள்ளார். இதில் 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதும் அடங்கும். ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று உணர்ந்ததால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறிய வோஸ்னியாக்கி, இல்வாழ்க்கையில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். அடிக்கடி காயத்தால் அவதிப்படும் வோஸ்னியாக்கி இந்த ஆண்டில் அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை.


தரவரிசையில் ஆண்டின் தொடக்கத்தில் 3-வது இடத்தில் இருந்த வோஸ்னியாக்கி தற்போது 37-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டென்னிஸ் வீரர் பெடரர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்: சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டது
டென்னிஸ் வீரர் பெடரர் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.
2. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக மலைப்பாம்பு ஒன்று படுத்து ஓய்வெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு?
வங்காளதேச தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4. நாகர்கோவிலில் நடந்த தென்மாநில டென்னிஸ் போட்டியில் சென்னை அணி முதலிடம் போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்
நாகர்கோவிலில் நடந்த தென்மாநில டென்னிஸ் போட்டியில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிசு வழங்கினார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100-வது வெற்றியை பதிவு செய்த செரீனா வில்லியம்ஸ், அரையிறுதிக்கு முன்னேறினார்.