டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிசில் பெனோய்ட் பேர், கார்லோவிச் பங்கேற்பு + "||" + Benoit Baer, Karlovich Participation in the Maratha Open Tennis

மராட்டிய ஓபன் டென்னிசில் பெனோய்ட் பேர், கார்லோவிச் பங்கேற்பு

மராட்டிய ஓபன் டென்னிசில் பெனோய்ட் பேர், கார்லோவிச் பங்கேற்பு
மராட்டிய ஓபன் டென்னிசில் பெனோய்ட் பேர், கார்லோவிச் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
புனே,

3-வது டாடா மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் பிப்ரவரி 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இந்த போட்டியில் உலக தரவரிசையில் 24-வது இடம் வகிக்கும் பெனோய்ட் பேர் (பிரான்ஸ்), கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான இவா கார்லோவிச் (குரோஷியா), பிலிப் கோல்ஸ்கிரீபர் (ஜெர்மனி), செக்குடியரசின் ஜிரி வெஸ்லி உள்ளிட்டோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.


ஏ.டி.பி. கோப்பை போட்டிக்காக இந்த ஆண்டு மராட்டிய ஓபன் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமாக புத்தாண்டின் தொடக்கமாக இந்த போட்டி நடத்தப்படும். முதல்முறையாக இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் முடிந்த பிறகு நடைபெறுகிறது.