டென்னிஸ்

அடுத்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு - லியாண்டர் பெயஸ் அறிவிப்பு + "||" + Tennis player Leander Paes announces that 2020 will be his last year as a pro tennis player

அடுத்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு - லியாண்டர் பெயஸ் அறிவிப்பு

அடுத்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு - லியாண்டர் பெயஸ் அறிவிப்பு
அடுத்த ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளுடன் ஒய்வு பெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் அடுத்த ஆண்டுடன் (2020) டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 46 வயதான லியாண்டர் பெயஸ் 28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வருகிறார். இதுவரை 18 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். 7 ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்தியர் ஆவார். 1996-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். டேவிஸ் கோப்பை டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை (44 வெற்றி) குவித்தவர் என்ற பெருமையும் இவர் வசமே உள்ளது.


“2020-ம் ஆண்டு சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். எனது அணியினருடன் பயணித்து சில குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து விளையாடுவேன். உலகம் முழுவதும் எனது நண்பர்கள், ரசிகர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாடுவேன். இந்த ஆண்டு எனக்கு உணர்வு பூர்வமாக இருக்கும். உங்களுக்கு (ரசிகர்கள்) நன்றி சொல்லும் ஆண்டாக இதை எடுத்துக் கொள்வேன்’ என்று பெயஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான லியாண்டர் பெயஸ் தற்போது இரட்டையர் தரவரிசையில் 105-வது இடத்தில் இருக்கிறார்.