டென்னிஸ்

பிரிஸ்பேன் டென்னிசில் ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ + "||" + Wild card for Sharapova In Brisbane Tennis

பிரிஸ்பேன் டென்னிசில் ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’

பிரிஸ்பேன் டென்னிசில் ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’
பிரிஸ்பேன் டென்னிசில் ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் நேரடியாக விளையாட முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது. 

காயம் மற்றும் தொடர் தோல்விகளால் தரவரிசையில் 133-வது இடத்துக்கு தள்ளப்பட்ட 32 வயதான ஷரபோவா புத்தாண்டில் எழுச்சி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்.

‘பிரிஸ்பேன் போட்டியை இதற்கு முன்பு பலமுறை தவற விட்ட நிலையில், தற்போது புத்தாண்டை இந்த போட்டியுடன் தொடங்குவது உத்வேகம் அளிக்கிறது’ என்று ஷரபோவா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ் !
மகளின் புகைப்படத்தை அதிகம் வெளியிடாத செரீனா வில்லியம்ஸ் தற்போது இருவரும் பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2. அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் பட்டியலில் 2 டென்னிஸ் வீராங்கனைகள்
அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர் பட்டியலில் 2 வீராங்கனை டென்னிஸ் வீராங்கனைகள் இடம்பெற்று உள்ளனர்.