டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் குணேஸ்வரன் வெற்றி + "||" + Guneswaran wins Australian Open qualifier

ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் குணேஸ்வரன் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் குணேஸ்வரன் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் குணேஸ்வரன் வெற்றிபெற்றார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 20-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஹாரி பவுர்சீரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு தமிழக வீரரான ராம்குமார் 6-4, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் போராடி அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியாவிடம் தோற்று வெளியேறினார். பெண்கள் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 6-7(2) என்ற நேர் செட்டில் பல்கோரியாவின் விக்டோரியா தோமோவாவிடம் பணிந்தார்.