ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி


ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
x
தினத்தந்தி 17 Jan 2020 11:41 PM GMT (Updated: 17 Jan 2020 11:41 PM GMT)

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சானியா ஜோடி முன்னேறியது.

ஹோபர்ட், 

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- நாடியா கிச்செனோக் (உக்ரைன்) ஜோடி, தமரா ஜிடான்செக் (சுலோவேனியா)-மரி பவுஸ்கோவா (செக்குடியரசு) இணையை எதிர்கொண்டது. 1 மணி 24 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சானியா ஜோடி 7-6 (3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சானியா கூட்டணி, சீனாவின் சூவாய் பெங்-சூவாய் ஜாங் இணையுடன் மோதுகிறது.

குழந்தை பெற்றுக்கொண்டதால் 2 ஆண்டு ஓய்வுக்கு பிறகு களம் திரும்பி அசத்தி வரும் 33 வயதான சானியா கூறுகையில், ‘நீண்ட காலம் விளையாடாத நிலையில் களம் திரும்பி இறுதிசுற்றை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது.

இன்றைய (நேற்று) நாளில் எங்களது சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. என்றாலும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி விட்டோம்’ என்றார்.


Next Story