டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், முகுருஜா + "||" + Australian Open Tennis In the 3rd round Natal, Muguruza

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், முகுருஜா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், முகுருஜா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால், முகுருஜா 3-வது சுற்றை எட்டினர்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெடெரிகோ டெல்போனிசை (அர்ஜென்டினா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். நடால் அடுத்து சக நாட்டவர் காரெனோ பஸ்தாவை சந்திக்கிறார்.


4-ம் நிலை வீரரான டேனில் மெட்விடேவ் (ரஷியா), தகுதி நிலை வீரர் ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டினசை 7-5, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னதாக 2-வது செட்டின் போது மெட்விடேவுக்கு மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வடிந்தது. இதையடுத்து சிகிச்சை எடுத்துக் கொண்டு, ஆட்டத்தை தொடர்ந்தார்.

மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மன்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), கரென் கச்சனோவ் (ரஷியா) உள்ளிட்டோர் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) உள்ளூர் வீராங்கனை அஜ்லா டாம்ஜனவோவிச்சை 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 2 மணி 22 நிமிடங்கள் நீடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் லாரா சிஜ்மன்டை வெளியேற்றினார். சிமோனா ஹாலெப் (ருமேனியா), பென்சிச் (சுவிட்சர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை போராடி வீழ்த்தி 8-வது முறையாக பட்டத்தை வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க ‘இளம் புயல்’ சோபியா கெனின், முகுருஜாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் முகுருஜா- சோபியா ஆண்கள் பிரிவில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முகுருஜா, சோபியா கெனின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னாள் சாம்பியன் பெடரரை நேர் செட்டில் ஜோகோவிச் சாய்த்தார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.