டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் குணேஸ்வரன் பங்கேற்பு + "||" + Maratha Open Tennis: Tamil player Guneswaran participates

மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் குணேஸ்வரன் பங்கேற்பு

மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் குணேஸ்வரன் பங்கேற்பு
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், தமிழக வீரர் குணேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.
புனே,

3-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் பிப்ரவரி 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 111-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் கோ சோடா, 97-வது இடத்தில் உள்ள போலந்து வீரர் கமில் மஜ்சிஜாக் ஆகியோர் விலகி உள்ளனர். இதனால் தரவரிசையில் 123-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த 30 வயதான குணேஸ்வரன் மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.