டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் + "||" + Maratha Open Tennis starts today

மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.
புனே,

மொத்தம் ரூ.4 கோடி பரிசுத்தொகைக்கான 3-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான இந்த போட்டி முன்பு சென்னையில் நடந்து வந்தது. பிரான்சின் பெனோய்ட் பேர், லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸ், குரோஷியாவின் கார்லோவிச், இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சுமித் நாகல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் தரவரிசையில் டாப்-10 இடத்தில் உள்ள வீரர்கள் யாரும் வரவில்லை.


சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் தனது முதலாவது சுற்றில் ஜெர்மனியின் யானிக் மாடெனையும், ராம்குமார், இத்தாலியின் சல்வடோர் காருசோவையும் எதிர்கொள்கிறார்கள். இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். உள்நாட்டில் பெயஸ் விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் நடமாடும் காய்கறி கடை தொடக்கம்
நெல்லையில் நடமாடும் காய்கறி கடை நேற்று தொடங்கப்பட்டது.
2. ‘வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ - பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு இல்லை
நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
4. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடக்கம் தமிழ் மொழிப்பாட தேர்வினை 7,634 மாணவ-மாணவிகள் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ்மொழிப்பாட தேர்வினை 7,634 மாணவ- மாணவிகள் எழுதினர்.
5. பிளஸ்-2 பொதுத்தேர்வு: 18,234 மாணவ-மாணவிகள் எழுதினர் 924 பேர் வரவில்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் தேர்வினை 18 ஆயிரத்து 234 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 924 பேர் தேர்வு எழுத வரவில்லை.