டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’ + "||" + Novak Djokovic outlasts Dominic Thiem to win eighth Australian Open title

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை போராடி வீழ்த்தி 8-வது முறையாக பட்டத்தை வென்றார்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வார காலமாக மெல்போர்ன் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதினார்.


பலம் பொருந்திய இரு வீரர்கள் மல்லுகட்டிய இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்தது போலவே களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை ஜோகோவிச்சும், அடுத்த இரு செட்டுகளை டொமினிக் திம்மும் வசப்படுத்தினர். ஆனாலும் துளியும் மனம் தளராத ஜோகோவிச், விடாப்பிடியாக வரிந்து கட்டி 4-வது செட்டை தனதாக்கினார். இதனால் கடைசி செட்டில் விறுவிறுப்பு எகிறியது. இந்த செட்டில் ஜோகோவிச், 3-வது கேமில் டொமினிக் திம்மின் சர்வீசை முறியடித்தார். அதன் பிறகு பக்குவமாக தனது சர்வீஸ்களை மட்டும் புள்ளிகளாக மாற்றி வெற்றிக்கனியை பறித்தார்.

4 மணி நேரம் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி மகுடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனை சுவைப்பது இது 8-வது முறையாகும். வேறு எந்த வீரரும் ஆஸ்திரேலிய ஓபனை 6 தடவைக்கு மேல் முகர்ந்ததில்லை. இதற்கு முன்பு 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு வாகை சூடியிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதி, இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் ஒரு போதும் தோற்றதில்லை. அந்த வீறுநடை இந்த சீசனிலும் தொடருகிறது. 


அதே சமயம் இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லாத 26 வயதான டொமினிக் திம் 3-வது முறையாக இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை பிரெஞ்ச் ஓபனில் கோட்டைவிட்டுள்ளார்.

பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த டொமினிக் திம்முக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ரபெல் நடாலை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்.

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ராஜீவ் ராம், இங்கிலாந்தின் ஜோ சலிஸ்பரி இணை 6-4, 6+2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ ஜோடியான மேக்ஸ் பர்செல்-லுக் சாவிலி ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றது. ராஜீவ் ராம்-சலிஸ்பரி ஜோடிக்கு இதுதான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அவர்களுக்கு ரூ.3 கோடியே 64 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

ஜோகோவிச்சின் 17-வது கிராண்ட்ஸ்லாம்

32 வயதான ஜோகோவிச் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-8, பிரெஞ்ச் ஓபன்-1, விம்பிள்டன்-5, அமெரிக்க ஓபன்-3 என்று மொத்தம் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (19) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜோகோவிச் உள்ளார்.

பிடித்தமான ஆடுகளம் - ஜோகோவிச்

“உலகில் எனக்கு பிடித்தமான ஆடுகளம், பிடித்தமான ஸ்டேடியம் இது தான். மீண்டும் ஒரு முறை கோப்பையை கையில் ஏந்தி ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். வியப்புக்குரிய வகையில் விளையாடிய டொமினிக் திம்மை இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் அவர் நிச்சயம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார்’


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ‘சாம்பியன்’
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க ‘இளம் புயல்’ சோபியா கெனின், முகுருஜாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் முகுருஜா- சோபியா ஆண்கள் பிரிவில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் முகுருஜா, சோபியா கெனின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னாள் சாம்பியன் பெடரரை நேர் செட்டில் ஜோகோவிச் சாய்த்தார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தினார், டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முதல்நிலை வீரர் ரபெல் நடாலை, ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் வீழ்த்தினார்.