டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Maharastra Open Tennis: Indian player Guneswaran progresses to 2nd round

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
புனே,

3-வது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் காதே 2-6, 4-6 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 6-2, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் திவிஜ் சரண் (இந்தியா)-அர்டெம் யூரிவிச் சிடாக் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி
தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.
2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்பு
மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்க உள்ளார்.