டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி + "||" + Marathon Open Tennis: Ramkumar-Brau Raja qualifies for the quarter finals

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
புனே,

3-வது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் 2-6, 6-7 (7-9) என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் தாரோ டேனியலிடம் தோல்வி கண்டு வெளியேறினார். 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் சால்வடோர் காருசோவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி 7-6 (8-6), 6-3 என்ற நேர்செட்டில் சுமித் நாகல் (இந்தியா)-இகோர் ஜெராசிமோவ் (பெலாரஸ்) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி
தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.
2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்பு
மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்க உள்ளார்.