டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி + "||" + Maratha Open Tennis

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் பெயஸ், குணேஸ்வரன் தோல்வி
தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது.
புனே,

 இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சூன் வோ கிவோனை (தென்கொரியா) சந்தித்தார். 1 மணி 43 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 3-6, 6-7 (5) என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். குணேஸ்வரனின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த 19-ம் நிலை வீரரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 174-வது இடம் வகிக்கும் தகுதிநிலை வீரர் ராபர்ட்டோ மார்கோரா (இத்தாலி) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சாய்த்தார்.


இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ராம்குமார்-புராவ் ராஜா ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணையை ஊதித்தள்ளியது. பெயஸ், உள்நாட்டில் விளையாடிய கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
4. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்பு
மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்க உள்ளார்.