டென்னிஸ்

பெங்களூரு ஓபன் டென்னிஸ்: சென்னை வீரர்கள் பிரஜ்னேஷ், ராம்குமார் வெற்றி + "||" + Bengaluru Open Tennis Madras players Prajneesh, Ramkumar win

பெங்களூரு ஓபன் டென்னிஸ்: சென்னை வீரர்கள் பிரஜ்னேஷ், ராம்குமார் வெற்றி

பெங்களூரு ஓபன் டென்னிஸ்: சென்னை வீரர்கள் பிரஜ்னேஷ், ராம்குமார் வெற்றி
பெங்களூரு ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 124-வது இடத்தில் உள்ள இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் பேன்சிலோவை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 180-வது இடத்தில் இருக்கும் சென்னை வீரரான ராம்குமார் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அபினவ் சஞ்சீவை பந்தாடி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.


இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 7-6 (2), 6-4 என்ற நேர் செட்டில் பிளாஸ் ரோலா (சுலோவெனியா), ஷின்ஜென் ஜாங் (சீனா) இணையை வீழ்த்தி கால்இறுதி சுற்றை எட்டியது. அதே சமயம் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்- சுமித் நாகல், ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர்-விஷ்ணு வர்தன் ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் தோற்று நடையை கட்டியது.

ஆசிரியரின் தேர்வுகள்...