டென்னிஸ்

பெங்களூரு ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெயஸ் ஜோடி + "||" + Bengaluru Open Tennis At the end of the half Paes Couple

பெங்களூரு ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெயஸ் ஜோடி

பெங்களூரு ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெயஸ் ஜோடி
பெங்களூரு ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-7(5), 0-6 என்ற நேர் செட்டில் பெஞ்சமின் போன்ஸியிடம் (பிரான்ஸ்) தோற்று வெளியேறினார். மற்றொரு இந்திய முன்னணி வீரரான ராம்குமார் 6-7 (2), 1-6 என்ற நேர் செட்டில் இவாஷ்காவிடம் (பெலாரஸ்) பணிந்தார். சுமித் நாகல், சகெத் மைனெனி, சித்தார்த் ரவாத், நிகி கலியந்தா ஆகியோரும் நடையை கட்ட ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் ஆந்த்ரே கோரன்சன் (சுவீடன்), கிறிஸ்டோபர் ரங்கட் (இந்தோனேஷியா) இணையை போராடி வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் புராவ் ராஜா-ராம்குமார், இந்தியாவின் சகெத் மைெ-னி, ஆஸ்திரேலியாவின் மேட் ரீட் ஆகிய ஜோடிகளும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜிடன்செக், அனஸ்டசியா
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீசில் நடந்து வருகிறது.